தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாங்குளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கி வைப்பு…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடந்த 10 ஆம் திகதி வீசிய புயல் காரணமாக 22 வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தன

மக்களால் குறித்த விடயம் பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின்  உதவி பிரதேச செயலாளர் கிராம அலுவலர் மற்றும் பலர் இணைந்து இந்த வீடுகளை நேரடியாக சென்று பார்வையிட்டு இந்த விடயங்கள் தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும் மாவட்ட செயலாளர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தனர்

இந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் உடைய முயற்சியின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் குறித்த மக்களுக்கு முதல் கட்டமாக மிக விரைவாக தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது

இதன் அடிப்படையிலேயே இன்றைய தினம் குறித்த 22 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மாங்குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கும் வைபவம் இடம்பெற்றது

மாங்குளம் கிராம அலுவலர் த .தனபால்ராஜ்  தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின்  உதவிப் பிரதேச செயலாளர் இ ரமேஷ் மற்றும்  முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள்  உத்தியோகத்தர் ச.சிவரூபன்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் அனர்த்த நிவாரண சேவைகள்  உத்தியோகத்தர்  எஸ்.நிறஞ்சன் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

முதலாவது கட் டமாக இந்த நிதி வழங்கப்பட்ட்தாகவும் இழப்புக்கள் கணக்கிடப்பட்டு மீதி நிதி வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்ட்து

இங்கு உரைநிகழ்த்திய ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின்  உதவிப் பிரதேச செயலாளர் இ ரமேஷ் அவர்கள் சொத்திழப்புக்களை ஈடுசெய்ய எங்களால் முடிந்தாலும் உயிராபத்துக்கள் வந்தால் எம்மால் ஈடுசெய்யமுடியாது எனவே வருமுன் காப்பதே சிறந்தது ஆகவே அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்

Comments
Loading...