Designed by Iniyas LTD
மாங்குளத்தில் மீண்டும் காற்று கோரத்தாண்டவம் வீடுகள் பல சேதம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் பகுதியில் இன்று 02.05.18 மாலை 3 மணியளவில் மழையுடன் கடும் காற்று வீசியதால் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன
மாலை 3 மாணியளவில் மாழை பெய்துகொண்டிருந்ததோடு பலத்த காற்று வீசியுள்ளது இந்த காற்றின் கோரத்தாண்டவத்தில் குறித்த பகுதியில் இருந்த சுமார் பத்து வீடுகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதோடு பயன்தரு மரங்கள் பலவும் சேதமாகியுள்ளது
குறித்த பகுதியில் மக்களது வீடுகளை புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு முகுந்தகஜன் மற்றும் மாங்குளம் பொலிசார் சென்று பார்வையிட்டுள்ளனர்
கடந்த 2 5 ம் திகதியும் மாங்குளத்தில் காற்றின் கோரத்தாண்டவத்தால் பல வீடுகள் சேதமாகி அவர்களுக்கு இளப்பீடுகள் எதுவும் கிடைக்க முன்னரே மீண்டுமொருமுறை காற்றின் கோரத்தாண்டவத்தில் இன்றும் பல வீடுகள் சேதமாகியுள்ளது


