Designed by Iniyas LTD
மாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையின் சடலம் மீட்பு..
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் இரண்டாம் ஒழுங்கை புதிய கொலனி பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய மங்ககநாதன் மகேஸ்வரன் என்கின்ற நபருடைய சடலம் இன்று காலை அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டு உள்ளது.
வீட்டில் நேற்றைய தினம் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் குறித்த நபர் இருந்ததாகவும் இன்று அதிகாலை அவருடைய மகன் வீட்டில் சென்றபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது,
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய தொடர்ந்து மாங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு அங்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி உடலை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பணிக்கப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப் பட்டிருக்கின்றாரா அல்லது தானாக தூக்கில் தொங்கி இருக்கிறார என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அவருடைய உடலில் ரத்தம் வெளியேறி இருப்பதை அவதானிக்க கூடிய நிலையில் இது கொலையா தற்கொலையா என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் எழுந்து இருக்கின்றது.
இது தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்