தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாணவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில்.

மீரிகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விப் பயிலும் 31 மாணவர்கள் இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு அல்லது குடிநீர் ஒவ்வாமை காரணமாகவே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் 5ஆம் தரத்தில் கல்விப் பயிலும் மாணவர்கள் சிலரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த மாணவர்கள் காலை உணவை இன்று 8 மணியளவில் உட்கொண்டுள்ளனர்.

இதன் போது சில மாணவர்களுக்கு அரிப்பு மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது.பின்னர் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மாணவர்களின் காலை உணவு காரணமாகவா இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் தற்போது வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் ,குறித்த மாணவர்கள் காலை உணவின் பின் பாடசாலை உணவகத்தில் கை கழுவியுள்ளனர். குறித்த நீரை பாவித்த மற்றைய மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏதாவதொரு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Comments
Loading...