Designed by Iniyas LTD
மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக அரசு பெறுப்பேற்ற பிறகு 2 ஆவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இந்த மின் கட்டண உயர்வால், ஏழை மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். திருவண்ணாமலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் பங்கேற்றனர். ஈரோட்டில் உள்ள வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு பங்கேற்றார்.
இதேபோல, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, விருதுநகர், தேனி, திருச்சி, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.