தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாயமான மலேசிய விமானத்தின் எஞ்சின் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிப்பு!

1239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் இயந்திரம் (என்ஜின்) தென்னாபிரிக்க கடலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி மலே­சிய தலை­நகர் கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து சீன தலை­நகர் பீஜிங்­கிற்கு பய­ணிகள் விமானம் புறப்­பட்டு சென்­றது. மலே­சிய எயர்­லைன்­ஸூக்கு சொந்­த­மான இந்த விமா­னத்தில் 239 பேர் பயணம் செய்­தனர்.

இந்­திய பெருங்­கடல் மீது பறந்த போது அந்த விமானம் திடீ­ரென மாய­மா­னது. எனவே அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்­கி­யி­ருக்க கூடும் என அறி­விக்­கப்­பட்­டது. அதன் பாகங்­களை தேடும் பணி நடந்­தது. ஆனால் எதுவும் கிடைக்­கா­ததால் அதில் பயணம் செய்த 239 பேரும் விபத்தில் பலி­யா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்­த­நி­லையில் கடந்த ஜூலை மாத இறு­தியில் பிரான்சின் ரீயூ­னியன் தீவில் விமா­னத்தின் இறக்­கைகள் கண்டு பிடிக்­கப்­பட்­டன. அவற்றை அவுஸ்­தி­ரே­லி­யாவின் நீர்­மூழ்கி வீரர்கள் தென் இந்­திய பெருங்­க­டலில் மீட்­டனர்.

இதற்­கி­டையே தற்­போது தென்­னா­பி­ரிக்­காவின் தெற்கு கடற்­கரை பகு­தியில் கேப்­டவுன் அருகே மொசல்பே நகர கடலில் ஒரு விமா­னத்தின் என்ஜின் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு மீட்­கப்­பட்­டுள்­ளது. அது விபத்­துக்­குள்­ளான மலே­சிய விமா­னத்தின் என்­ஜி­னாக இருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.

இத்­த­க­வலை மலே­சிய போக்­கு­வ­ரத்து அமைச்சர் லியோவ் நியாங் லை தெரி­வித்­துள்ளார். இது மாய­மான விமா­னத்தின் என்­ஜினா? என ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.

சமீ­பத்தில் மொசாம்பிக் கடலில் விமா­னத்தின் உடைந்த 2 பாகங்­களை ஆஸ்­தி­ரே­லியா மீட்பு குழு கண்­டு­பி­டித்­தது. அதுவும் மாய­மான மலே­சிய விமா­னத்தின் பாக­மாக இருக்­கலாம் என்றும் அவர் கூறினார்.

Comments
Loading...