தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் இலங்கையில் நடக்கிற கலைநிகழ்ச்சிக்கும் விஜய் டி.வி.க்கும், எந்த சம்பந்தமும் இல்லை

விஜய் டி.வி. சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

விஜய்தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே விஜய் டி.வி. இருந்திருக்கிறது. இதனாலேயே விஜய் டி.வி.யின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலக தமிழர்களின் அன்பும், ஆதரவும் பெருகி கொண்டே இருக்கிறது. இந்தநிலையில் விஜய் டி.வி. குறித்து வரும் உண்மைக்கு புறம்பான சில செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம்.

மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் இலங்கையில் நடக்கிற கலைநிகழ்ச்சிக்கும் விஜய் டி.வி.க்கும், எந்த சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல இதற்கு முன் விஜய் டி.வி. இலங்கையில் எந்த ஒரு கலை நிகழ்ச்சியையும் நடத்தியது இல்லை. விஜய் டி.வி. குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்து உண்மைக்கு புறம்பானவை. விஜய் டி.வி. எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...