தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாலத்தீவுகளில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர்

சென்னையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்துவதற்காக மாலத்தீவுகளில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர்.  அவர்கள் தூதரகத்திற்கு வெட்டிங் ஹால் (திருமண மண்டபம்) என்றும் திட்டத்தை நிறைவேற்றும் தீவிரவாதிகளின் பெயர்களை குக்ஸ் (சமையல்காரர்கள்) என்றும் ரகசிய பெயர்களை கொண்டு அழைத்துள்ளனர்.USEmbassy

தாக்குதலுக்கு பயன்படும் வெடிகுண்டு கருவிகளை ஸ்பைசஸ் (மசாலா பொருட்கள்) என்றும் அவர்கள் அழைத்துள்ளனர்.  பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் தென் இந்தியாவில் இத்தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்துள்ளனர்.  திட்டத்தை செயல்படுத்துவதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசைன் கைது செய்யப்பட்டு கடந்த நவம்பர் 28ந்தேதி 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவனிடம் நடந்த விசாரணையில், இலங்கையில் பாகிஸ்தான் தூதராக அப்பொழுது இருந்த ஆமீர் ஜுபைர் சித்திக் என்பவரும் தாக்குதல் திட்டத்தில் பெரும் பங்கு வகித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.  அவரது உத்தரவின்படியே அமெரிக்க தூதரக தாக்குதலில் இத்தகைய ரகசிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்று உசைன் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போர் தாக்குதல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவாகியுள்ள வழக்கில் சித்திக்கை குற்றவாளி என தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments
Loading...