Designed by Iniyas LTD
மாலியில் பலியான இரண்டு இலங்கை இராணுவத்தினரின் சடலங்களும் இன்று நாட்டுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளன.
மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டுத் தாக்குதலுக்கு பலியான இரண்டு இலங்கை இராணுவத்தினரின் சடலங்களும் இன்று நாட்டுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்று அவர்களின் சடலங்கள் கொண்டு செல்லப்படஉள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்போது இராணுவத்தினரின் சடலங்களுக்கு விசேட மரியாதை செலுத்துவதற்கு இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலியில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த மாதம் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் பலியாகி இருந்தனர்.
இதேவேளை இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.