தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாவீரர் துயிலுமில்லங்களை மீண்டும் புனித இடங்களாக்க வேண்டும்!

kanagapuram_-3-copyமாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில் அவை புனித இடங்களாக மாற்றப்பட்டு பேணப்படவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நாங்கள் எங்கள் பிள்ளைகளை புதைக்கவில்லை விதைத்து விட்டு சென்றோம். எனவே பிள்ளைகளை விதைத்த இடங்களை புனித இடங்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. கிளிநொச்சி கனகபுரம்,முல்லைத்தீவில் வன்னிவிளாங்குளம் மாவீர் துயிலும் இல்ல காணிகளினிலிருந்து இராணுவம் வெளியேறியதையடுத்து அவை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஏனைய இடங்களிலுள்ள மாவீர் துயிலும் இல்லங்களிலிருந்தும் இராணுவம் வெளியேற வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லமாக இருந்த காணி கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கல்லறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இராணுவம் தற்போது வெளியேறியுள்ளது.அதே போன்று கிளிநொச்சியிலும் படையினர் வெளியேறியுள்ள நிலையினில் அப்பகுதிகளினில் மரங்கள் நாட்டப்பட்டு தமிழ் மக்களது உயிரோடும் உணர்வோடும் இணைந்த புனித இடங்களாக பேணப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...