தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாவீரர் நாளில் இராணுவ புலனாய்வாளர்களால் அரங்கேற்றப்படவிருந்த நாடகம் முறியடிப்பு – யாழில் சம்பவம்..

யாழ் கோப்பாய்  மாவீரர் நினைவேந்தல் நினைவிடத்திற்குள் புலிக்கொடி மற்றும் தமிழீழ வரைபடம் பொறித்த ஆடையுடன்  சென்ற  இராணுவப் புலனாய்வாளர் விரட்டியடிகப்பட்டுள்ளார்.

கோப்பாய் மாவீரர் நாளை  தடை செய்யவேண்டும்  கோப்பாய் பொலிசார் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில்  மாலை 05 மணியளவில் நினைவேந்தல் நடைபெறும் இடத்திற்குள் உள்நுளைந்த இராணுவப் புலனாய்வளர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் தானது பையினுள் கொண்டுசென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடையினை எடுத்து அதனை அணிய முற்பட்டுள்ளார்.

அப்போது  நிலைமையை உணர்ந்து கொண்ட நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

மேலும் குறித்த நபரின்   பையினுள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியும் இருந்ததாக்க கூறப்படுகின்றது.

இதேவேளை மாவீரந் நாள் நினைவேந்தலின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி மற்றும் தமிழீழ வரைபடம் உள்ளிட்டவை பயன்படுத்த  நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

அந்த  நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தலை குழப்புவதற்காக இராணுவ புலனாய்வாளர்களால் அரங்கேற்றப்படவிருந்த நாடகம் முறியடிக்கப்பட்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...