தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாவீரர் நினைவாலய ஒன்று கூடலில் பெருமளவான மக்கள் பங்கேற்பு!

e9c6eada5138cde4c2f60ee656dfe29af6e592be41a853e79235b53ad493cf0bநேற்று 28ம் திகதி பிரித்தானியாவில் St. Andrew’s Church 89, Malvern Avenue South Harrow Middlesex எனும் இடத்தில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கும் பணி தொடர்பான ஒன்று கூடலில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்துகொண்டு தங்களது ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.

எம்மினத்தின் தனிப்பெரும் தலைவனை ஈன்றெடுத்த ஈழத்தாய் தாய் பார்வதியம்மாளின் நினைவு நிகழ்வும் கேணல் ரூபன் மற்றும் லெப் கேணல்  சித்திரன் ஆகியோரின் நினைவு நிகழ்வு நடைபெற்றது. நினைவு நிகழ்வினை தொடர்ந்து அவசியமும் அவசரமுமான மாவீரர் துயிலுமில்லம் அமைக்கும் பணி தொடர்பான ஒன்றுகூடலில் மக்கள் கலந்து கொண்டு அனைவரும் துயிலுமில்ல பணிக்கான நிதியினை வழங்கினார்கள். மேலும் ஒரு ஈழத்தமிழர் தன்னிடமிருந்த பெறுமதியான தங்க நகையினையும் கொடுத்து உதவியுள்ளார்.

மேலும் இந்த நினைவாலயத்துக்கு புலம்பெயர் மக்களால் வழங்கப்படும் நிதியில் நினைவாலயம் பூர்த்தியானதும் இதிலிருந்து பெறப்படும் நிதிகள் அனைத்தும்  ஈழத்தில் களத்தில் நின்று போராடி அங்கவீனமான அனைத்து போராளிகளுக்கும் நிரந்தரமான உதவிகளை செய்ய அடித்தளமாக அமையும்.

3f9e53da25694060903058bcfd7a85348e9b95a1b80baf67659aa32e59267160

17bbd5678a211d3825ac34c2fe3129dbe399a3d0f0a19170a9fdcb0dbeeb4e56

9ea3f38afce2943472b2dfe0db4f6764b139700cc86290cd093ff6b8df4c5d53

Comments
Loading...