தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் கிறிஸ்டினா மெஹாலேவை போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.BNP Paribas Open - Day 13

மற்றொரு ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 7-5 என்ற நேர்செட்டில் டாரியா கசட்கினாவை (ரஷியா) வென்றார். இவானோவிச் (செர்பியா), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), வோஸ்னியாக்கி (டென்மார்க்), கிவிடோவா (செக்குடியரசு), குஸ்னெட்சோவா (ரஷியா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) உள்ளிட்டோரும் 2-வது சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் சானியா மிர்சா (இந்தியா)-மார்ட்டினா ங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி 6-0, 6-4 என்ற நேர்செட்டில் லாரா அருபாரெனா (ஸ்பெயின்)-ராலுவா ஒலாரு (ருமேனியா) ஜோடியை தோற்கடித்து அடுத்த சுற்றை எட்டியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-புளோரின் மெர்கா (ருமேனியா) ஜோடி 6-2, 4-6, 4-10 என்ற செட் கணக்கில் பாப்லோ குவாச் (உருகுவே)-மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) கூட்டணியிடம் தோற்று வெளியேறியது.

Comments
Loading...