தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மியாமி விமான நிலையத்தின் மேலே பறந்த நீல நிற புகை

அமெரிக்காவில் உள்ள மியாமி விமான நிலையத்தின் மேலே பறந்த நீல நிற புகை வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள மியாமி விமான நிலையத்தின் மீது ஒரு நீல நிற புகை தோன்றியுள்ளது. அதை கண்ட பொது மக்கள் சிலர் தான் வைத்திருந்த கைபேசி மற்றும் கமெராக்கள் கொண்டு வீடியோ எடுத்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளனர்.mayan

அந்த நீல நிற புகை UFO வாக இருக்கலாம், அல்லது விமானத்தை தாக்க வந்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து ராம்ஜே என்பவர், இந்த புகை நீர் மற்றும் உறைந்த வாயு போன்று உள்ளது. இது விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மியாமி அதிகாரி ஒருவர் கூறியதாவது, புளோரிடா நகரில் ஏவப்பட்ட ஏவுகணையிலிருந்து வெளியான ஹைட்ரஜன் வாயுவே வானத்தில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments
Loading...