Designed by Iniyas LTD
மிருகங்களும் செல்பி எடுக்கலாம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் விலங்குகள் தாங்களாகவே செல்பி எடுத்துக்கொள்ளும் வகையிலான உயர் ரக கேமாராக்களை கூகிள் நிறுவணத்தினர் நிறுவி உள்ளனர். 
மோஷன் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமராக்களின் அருகே விலங்குகள் வரும் போது அதனை உணரும் சென்சார்கள் கேமராவை தானாகவே இயக்கி செல்பி போட்டாக்கள் எடுக்கத் தொடங்கி விடுகின்றன. கடந்த வாரம் பொருத்தப்பட்ட இந்த கேமரா வழியாக பல வகையான விலங்குகளின் செல்பி புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதே உயிரியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் வழியாக வித்தியாசமான கோணத்தில் விலங்குகளைக் காண்பது வித்தியாச அனுபவமாக உள்ளது. விலங்குகளுக்கும் இனி மனிதர்களைப் போல செல்பி மோகம் உண்டானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.