Designed by Iniyas LTD
மீட்பு விண்ணப்பம்: த.செல்வா
…………………………………..
ராத்திரி இரவின் ஒவ்வொரு
அடுத்த பொழுதும்
ரத்தக் காட்டேரிகளின்
சுகந்தம் பரவும்
பெரும் புயலாயிற்று
ஒரு இலைகூட முளைவிடத்
தகுதி அற்று
பட்டுப் போய் புளிதி படிந்து
வெடிப்பு வரிகளால்
செத்துப் போன பட்டமரமும்
தொடர்புடைய பதிவு
பயப்பட
தொக்கி நிக்கிறது
சிக்கல் புயல்
கணம் கணம் கலைந்து போம்
கனவுப் புனல்
காலனிடம் தாழ்மையான
விண்ணப்பம் கோருகின்றன
ஒரு சத்தியவான் போலவோ
மன்மதன் போலவோ
அவர்களையும் உயிர்ப்பித்துவிடு
இவர்களுக்காக.
த.செல்வா
18.01.2016
