Designed by Iniyas LTD
மீண்டும் இந்தியப் பிரதமராக நரேந்திரமோடி…

இந்தியாவில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா நாடு முழுவதும் தமது வெற்றியை கொண்டாடி வருகிறது.
இந்நிலயில் இந்திய பிரதமாராக மீண்டும் நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
டெல்லியில் மாலை 5.30 மணிக்கு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிமன்றக்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அரசு பொருளாதார சீர்திருத்த திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் என பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்த உற்பத்தி விகிதத்தில் சரிவு, வாராக் கடன்கள், விவசாயிகளின் தீராத பிரச்சினைகள், புதிய வேலைவாய்ப்புகளுக்கான தேவைகள் என பல சவால்கள் அங்கு காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை காங்கிரஸ் வென்றுவிடும் என்ற அச்சத்தால் இந்தியாவில் முதலீடு செய்த பலர் தங்கள் முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற்று வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.