தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு..

நாட்டில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்யும் முகமாக ஊரடங்குச் சட்டம் இரவு வேளைகளில் அமுல் படுத்தப்பட்டு காலைவேளைகளில் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...