தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் உலகின் முதல் பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர்!

உலகின் முதல் பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ். நீண்ட காலமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-ஐ பின்னுக்கு தள்ளிய ஜெஃப் பெசோஸ் இரண்டாவது முறையாக உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

போர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். அமேசான் நிறுவன பங்குகள் 8 சதவிகிதம் உயர்ந்து பெசோஸ் சொத்த மதிப்பு 700 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகளும் 7 சதவிகித உயர்வை எட்டிய நிலையில், பெசோஸ் மதிப்பு 9060 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. பில் கேட்ஸ் மதிப்பு 9010 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன் முதல் முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்தார். அமேசான் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு வருமானம் வரலாற்றில் முதல் முறையாக அதிகரித்ததை தொடர்ந்து ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்தார். எனினும் சில மணி நேரங்களில் அமேசான் வருமானத்தில் ஏற்பட்ட சிறிய தவறு பெசோஸ் முதலிடத்தை பறித்து கொண்டது.

போர்ப்ஸ் அமெரிக்காவின் 400 பணக்காரர்கள் பட்டியில் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடம் பிடித்திருந்தார். நிஜ நேர பங்குகளின் அடிப்படையில் இந்த பட்டியல் மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் பெசோஸ் நிலை மாறலாம் என கூறப்படுகிறது.

Comments
Loading...