தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் கால் நடை களுக்கான செயற்கை முறையிலான சினைப்படுத்தும் நடவடிக்கை

உடுவில் கால் நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தினால் மீண்டும் கால் நடை களுக்கான செயற்கை முறையிலான சினைப்படுத்தும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உடுவில் பிரதேச கால் நடை வைத்தியதிகாரி ரி.விமலகுமார் தெரிவித்துள்ளார்.கால்நடைகள்

கடந்த இரண்டு மாதங்களாக கால் நடைகளுக்கு பரவியகால் வாய் நோய் காரணமாக செயற்கை முறையில் சினைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்ததாகவும்

தற்போது கால்நடைகளுக்கான  கால்வாய் நோய் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் செயற்கை முறையில் கால் நடைகளை சினைப்படுத்துவதற்ககான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

அத்துடன்  அச்சுவேலி பண்னையில் உற்பத்தி செய்யப்படும் கலப்பு இன கொல்லைப்புற கோழிக்குஞ்சுகள் எதிர் வரும் 19 ம் திகதி உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்கு உடுவில் கால் நடை அபிவிருத்தி சுகாதாரத் தினைக்களத்தில் வைத்து வழங்கப்படவுள்ளன.

குறிப்பிட்ட கலப்பு இன கொல்லைப்புற கோழிக்குஞ்சுகள் தேவைப்படுபவர்கள் சுன்னாகம் கொத்தியாலடியில் அமைந்துள்ள கால் நடைகள் அபிவிருத்தி சுகாதாரத் தினைக்களத்தில் எதிர் வரும் 17 ம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்க் கொள்ளும் படி கால்நடைகள் சுகாதார வைத்தியதிகாரி ரி.விமலகுமார் வேண்டியுள்ளார்.

Comments
Loading...