Designed by Iniyas LTD
மீண்டும் தொடங்கும் படேல் இனத்தவரின் போராட்டம் : ஹர்திக் படேல் அறிவிப்பு
குஜராத் மாநிலம் சூரத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் இனத்தவர் இன்று முதல் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
படேல் இனத்தவரின் போராட்டத்தை முன்னின்றி நடத்தி வரும் ஹர்திக் படேல் இதை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்முறை நாட்டையே திரும்பிப் பார்க்கிற வகையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இப்போராட்டத்திற்கு குஜ்ஜர்ஸ், குர்மீஸ், சவ்தாரிஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ள ஹர்திக், அகிம்சையான முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். படேல் இனத்தவர் கடந்த மாதம் 25ம் தேதி நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்து 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.