தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீனவர்கள் நலன் காக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் – ஓ. பன்னீர்ச்செல்வம்

மீனவர்கள் நலன் காக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை பெற்று தாயகம் திரும்பியிருப்பது மகிழ்ச்சிக்கு உரியது என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.o-pannerselvam

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனை தருவதாக கூறியுள்ள அவர், கடந்த 3 ஆண்டுகளாக இதுபற்றி என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மீனவர்கள் நலனுக்காக கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மேற்கொண்டுவரும் பணிகளை அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 5 மீனவர்கள் யாழ்ப்பாணம் மாகாண சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர்களுக்கு வழக்குச் செலவை தமிழக அரசு செய்ததும், அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து முன்தேதியிட்டு அவர்களின் குடும்பத்தாருக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் வழங்க 2012 ஆம் ஆண்டில், உத்தரவிட்டதையும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

5 மீனவர்களின் மேல்முறையீட்டுக்காக வழங்கப்பட்ட 20 லட்சம் ரூபாயையும் சேர்த்து இதுவரை 47 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் சென்னை விமானநிலையத்திற்கு வந்த 5 மீனவர்களையும் தமிழக அமைச்சர்கள் வரவேற்றதையும், அவர்கள் வாழ்க்கையை புதிதாக தொடங்க ஏதுவாக ஒவ்வொருவருக்கும் 3 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டதையும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...