தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீனவர் பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்..

மீனவர் பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(01) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பு இன்று மாலை 3.00 தொடக்கம் மாலை 4.30 மணிவரை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது

கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மீனவர் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்ட்டது இந்த குழு இன்று கூடி பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்ததாக தெரியவருகிறது

இந்த கலந்துரையாடலில்  வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைகள் உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இருப்பினும் இந்த கலந்துரையாடலுக்கு    ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது

கலந்துரையாடலின் இறுதியில் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் ஆகியோர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

Comments
Loading...