Designed by Iniyas LTD
மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கை – இந்தியா ஒப்பந்தம்
தமிழக மீனவர் பிரச்னைக்கு புதிய மற்றும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக கூடுதல் செயலர் ரேணு பல் கூறியதாவது: 
மீனவர் பிரச்னை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீராவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்னையில் இருக்கும் சிக்கல்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். முடிவில், மீனவர் பிரச்னைக்கு புதிய மற்றும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வழியை இருநாடுகளும் கண்டறிவதென முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் அழைப்பை ஏற்று, மீனவர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்று அவர் கூறினார்.