தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீன்பிடித்துவிட்டு திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கிய சிறீலங்கா கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துவிட்டு திரும்பிய ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன், மீனவர்கள் வைத்திருந்த வலைகளை அறுத்தெறிந்த இலங்கை கடற்படையினர் படகுகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.fish

இதன் காரணமாக, சுமார் பத்து லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், பாதுகாப்பாக மீன் பிடிக்கலாம் என நம்பியதாகவும், ஆனால் தாக்குதல் தொடர்வதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர். இந்த பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments
Loading...