தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முகநூல் நிறுவனப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

முகநூல் நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் முகநூல் பிரதிநிதிகளே  இவ்வாறு இலங்கைக்கு சென்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கண்டியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குரோதக் கருத்துக்கள் முகநூலில் ஊடாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில்  விசாரணை செய்யவே அவர்கள் இலங்கைக்கு சென்றுள்ளதாக  கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...