தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முகநூல் மூலம் தமிழ் யுவதிகளை ஏமாற்றிய இளைஞர் வவுனியாவில் கைது…

பேஷ்புக் குலுக்கலில் பரிசை வென்றுள்ளதாக கூறி, யுவதிகளை ஏமாற்றி பணம் மோசடி செய்த நபர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வவுனியாவில்  நேற்றையதினம்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த நபர் போலியான பேஷ்புக் கணக்கின் ஊடாக வவுனியாவை சேர்ந்த யுவதியை ஏமாற்றி 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ,

கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த  சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போலி பேஷ்புக் கணக்கை ஆரம்பித்து, வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ் யுவதிகளை குறிவைத்து பண மோசடி செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர்  பேஷ்புக் நிறுவனத்தின் கணக்கிற்கு இணையான போலி பேஷ்புக் கணக்கில் இருந்து தகவலை அனுப்பி  யுவதிகளைடம் பண மோசடி செய்துள்ளதாகவும்\  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குலுக்கலில் கிடைத்துள்ள பரிசை கொழும்பு துறைமுகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள சுங்க கட்டணமாக செலுத்த வேண்டும் எனக் கூறி சந்தேக நபர் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை யுவதியிடம் கோரியுள்ளதுடன் யுவதியிடம் வழங்கிய தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்யுமாறும் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த இளைஞனை  வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...