Designed by Iniyas LTD
முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!
முகமாலை வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) குறித்த பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பளை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.