தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முகாமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர் படுகாயம்..

யாழ் முகாமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஒருவர் கை ஒன்றை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாரட்ன(வயது 45) என்பவரே இவ்வாறு  காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றும் குறித்த நபர் முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை,  மிதிவெடி வெடித்ததில் இரண்டு கைகளிலும் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்  போதனா வைத்தியசாலைக்கு குறித்த நபர்  மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின்  இடது கையில் பலத்த சிதறல் காயம் காணப்படமையினால் மணிக்கட்டுப் பகுதியில் இருந்து கை அகற்றப்பட்டுள்ளதாக  மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...