Designed by Iniyas LTD
முட்டியில் சுட்டது புலிகளா? திரிவுபடுத்தும் சிங்கள அரசும் , கடத்தல்களை கண்டுகொள்ளாத ஊடகங்களும் .. இ. செங்கையான்
முட்டியில் சுட்டது புலிகளா? திரிவுபடுத்தும் சிங்கள அரசும் கடத்தல்களை கண்டுகொள்ளாத ஊடகங்களும்
தமிழர்தாயக பகுதிகளில் இரகசியமாக கடத்தல்களும் கொலைகளும் கற்பழிப்புக்களும் நடைபெற்ற காலம் மாறி தற்போது கடந்த சில நாட்களாக வன்னியில் வெளிப்படையாக பல தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியும், கைது செய்தும் கடத்தியும் வருகின்றனர்.
ஆனால் இது தொடர்பான செய்திகள தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாக உள்ளது .முள்ளிவாய்க்கால் படுகொலைகளையும் அப்போது பல ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தது யாவரும் அறிந்த ஒன்று. ( கூகுள் google முள்ளிவாய்க்கால் பிரதேசத்தையே அக்காலப்பகுதியில் மறைத்திருந்தது). தற்போதும் பல கடத்தல்கள், கைதுகள், சில படுகொலைகள் கூட தமிழர் தாயாக பகுதியெங்கும் நடந்தேறுகின்றது வல்லருசுகளோ கருங்கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்துவதிலும் மலேசியவிமானத்தின் மாயையை அறிவதிலும் மாநாடுகளையும் ஆராட்சிகளையும் செய்துவருகிறது.
ஜெனிவாவில் நமக்கான தீர்வுகளை தருவார்கள் என்று நம் அரசியல்வாதிகளும் தன் இனத்திற்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்காதா ? என்ற ஏக்கத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கும் இந்த தருணத்தில், சிங்களமோ தமிழீழ விடுதலைப்புலிகள் மறைந்திருப்பதாகவும் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாகவும் புதுக்கதையை புனைந்து விட்டு அங்கே தமிழர் நிலங்களில் ஊழிக்கூத்து ஆடுகின்றது.
(ஈ கூட நுழைய முடியாது என்று சொன்ன கட்டுநாயக்க விமானதளத்தினும் ஒரு அணியையே உள் போகசெய்து ஆயிரக்கணக்கான சிறிலங்கா விமானப்படையினர் காவல்நிற்க நின்ற விமானங்களை காக்கா சுடுவதுபோல் சுட்டுவிட்டு சிறிலங்கா அரசின் இதயத்தின் வால்புகள் சிலவற்றை செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய சாம்பலை சிங்களத்திற்கு பரிசளித்த து மட்டுமன்றி, தமிழர்தாயக பகுதிகளில் தமிழ் மக்களின் உயிர்களை காவுகொள்வதற்கு சிங்கள இராணுவத்தின் கோழைத்தனமான விமானத்தக்குதல்களை நிகழ்த்திய விமானங்களுக்கும் இரத்த வெறி பிடித்த காட்டேரிகளிற்கும் தலைமையகமாக விளங்கிய அனுராதபுர சிங்கள கூட்டுபடைதளத்தினுள்ளும் 21 தற்கொடையாளிகளை இலாபகரமாக உள்ளே அனுப்பி சிங்களத்திற்கு பேரழிவைகொடுத்த தமிழீழ வேங்கைகளை தன்னகத்தே கொண்ட தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் புடமிட்டு வளர்த்த தமிழீழ விடுதலை புலிகள் சிங்கள காடையர்களுக்கு எப்படி காலில் சுடுவார்கள் ? அப்படி அவர்கள் சுட்டிருந்தால் நிட்ச்சயமாக் சிங்கள இராணுவத்தின் நெஞ்சின் இடது பக்கம் இதயத்தில் லப் டப் ஓசைதரும் வால்புகளை நிட்சயம் கிழித்திருக்கும் என்பது மட்டும் உலகறிந்த விடயம்)
ஆனால் நமது சொந்தங்கள் நாளாந்தம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் இணையங்களை திறந்து மலேசியன் விமானத்தை தேடிகொண்டிருகின்றோம். சில இணைய தளங்களோ இக்காலத்தை பயன்படுத்தி ஈடிணையற்ற தியாகங்களை உள்ளடக்கிய நம் விடுதலை போராட்டத்திற்கும், தாயகத்தில் சிங்கள காடையர்களின் துப்பாக்கி முனையிலும் நீதிகேட்டு போராடுகின்ற போராட்டங்களையும், உலகமெலாம் பரந்துவாழும் உலகத்தமிழர்கள் குளிரையும் பாரது செய்யும் போராட்டத்தையும், தமிழக மக்கள் செய்யும் போராட்டத்தையும் கொச்சைபடுத்தி போராடத்திற்கு புது வியாக்கியானம் எழுதி மக்களின் சனநாயக போராட்டங்களை திசைதிருப்ப முயல்கின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.
இவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும் ” உலகின் போக்கிற்கேற்பவும் சிலரின் விருப்பு வெறுப்புக்காகவும் இலட்சியத்தை மாற்றமுடியாது வேண்டுமானால் போராட்ட வடிவங்களை மாறிக்கொள்ளலாம்” ஏனெனில் வடிவங்கள் தற்போது போராடுபவர்களை பொறுத்தது. ஆனால் இலட்சியமோ மாவீரகள் மற்றும் தியாகிகளான தமிழ்மக்களும் தங்கள் இரத்தத்தினாலும் உயிராலும் எழுதிவிட்ட உயில்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நாங்கள் இவ்வாறு இருந்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழர்களை எல்லாம் கொன்றுவிட்டு ஏப்பமிட்டபின் வேற்றுக்கிரக வாசிகள் தமிழர்களை கொன்றுவிட்டதாக எல்லாருக்கும் உலகவியாக்கினம் கற்றுத்தருவான் சிங்கள கொலைகார அரக்கன் ராசபக்சே அப்போது அழிந்தது நம் இனம் என்ற உணர்வுகள் அற்று வேற்றுக்கிரக வாசிகளை பற்றி இணையத்தில் பதிவேற்றுபவர் ஆகவும் அதனை பார்பவர்களாக ஏனையவர்களும் இருக்கவேண்டிய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
11.03.2014 அன்று 7மாத கருவை தனது வயிற்றில் சுமந்த அந்த 26 அகவை இளம் தாய் சிங்கள இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு இன்றுவரை எங்கே இருகின்றாள் அவள் சிங்கள காடையர்களின் கைகளில் சிக்கி என்னவேதனையை அனுபவிக்கின்றாளோ என்பிள்ளை ? என்ற ஏக்கத்தில் பெற்றோரும் தாயை பிரிந்து 4 அகவை மகனும் துடித்துக்கொண்டு இருகின்றார்கள். இதனையும் பல ஊடகங்கள் இன்றுவரை இருட்டடிப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜெனிவா சுவரொட்டிகளை ஒட்டியதாக குற்றம் சாட்டபட்டு முன்பு 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஒரே வாரத்தில் மட்டும் 15ற்கு மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழ் மொழியை பயன்படுத்தி இணையதளம் நடத்தி குழப்பமான கருத்துக்களை கொடுக்காதீர்கள்.பயன்படுத்தும் மொழி பாதிக்கப்படுபவர்களின் மொழி என்று கருதியாவது தாயகத்தில் நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டுவந்து பாதிக்கப்பட்ட நம் உறவுகளை காப்பதற்கு ஒற்றுமையுடன் உழைக்க முன்வாருங்கள் .
வன்னியிலிருந்து…
இ.செங்கையான்