Designed by Iniyas LTD
முதன்முதலாக சவூதியில் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பெண் …
சவூதியில் புதிய வங்கியின் தலைவராக சவூதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்திற்கு தலைமை வகித்து வரும் ஒலயன், சவூதி அரேபியாவின் நிதித்துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.
போர்ப்ஸ் இதழின், மத்திய கிழக்கு நாடுகளில் 2018ஆம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதலாவது இடத்தை பெற்றிருந்தார்.
இந்த நிலையில் குறித்த புதிய வங்கி, 17.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் அந்நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.
நீண்டகாலமாக பழமைவாதத்தை கடைப்பிடித்துவரும் சவூதி அரேபியா நாடு, கடந்த ஓராண்டாக பெண்களுக்கான பல உரிமைகளை வழங்கி வருகிறது.
குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக பெண்கள் வாகனம் இயக்குவதற்கு அனுமதி வழங்கியது.
இதேவேளை சவூதி அரேபியாவை நவீனமயமாக்கும் முயற்சியில் இளவரசர் முகமத் பின் சல்மான் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.