தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முதலமைச்சர் விக்கியின் செயலாளர் இடமாற்றம்?

varatheeswaranமுதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது உள்ளூராட்சி, தொழிற்துறை மற்றும் காணிகள் அமைச்சின் செயலாளரான இ.வரதீஸ்வரனை இடமாற்றம் செய்ய ஆளுநரிடம் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.
வடமாகாணசபையின் அமைச்சுக்களது செயலாளர்களை நிழலாக இயக்கி வருபவராக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இருப்பதாக குற்றச்சாட்டுக்களினை அனைத்து தரப்புக்களும் எழுப்பி வரும் நிலையில் தனது உள்ளூராட்சி, தொழிற்துறை மற்றும் காணிகள் அமைச்சின் செயலாளரான இ.வரதீஸ்வரனை இடமாற்றம் செய்ய முதலமைச்சர் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.
அண்மையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு முதலமைச்சர் அனுப்பி வைத்திருந்த தனிப்பட்ட கடிதத்தில் நிர்வாக செயற்பாடுகளில் தலையீடுகள் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்ததுடன் இது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளில் தான் ஈடுபடவேண்டிவருமென எச்சரித்துமிருந்தார். இதனையடுத்தே அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அடங்கிப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனது நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் அவைத்தலைவரது தலையீடுகள் தொடர்பினில் கடும் சீற்றமடைந்திருந்த முதலமைச்சர் அமைச்சின் செயலாளரான இ.வரதீஸ்வரனை இடமாற்றம் செய்ய ஆளுநரிடம் கோரியிருப்பது அம்பலமாகியுள்ளது.
அவைத்தலைவரது கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுவதாக வரதீஸ்வரனை குற்றஞ்சாட்டியே இடமாற்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது

Comments
Loading...