Designed by Iniyas LTD
முதல்வர் ஜெயலலிதா சரியான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்- வக்கீல் ராம் ஜெத்மலானி
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவ்வழக்கில் அவர்களின் சார்பில் பிரபல வக்கீல் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினார். அவரது சிறந்த வாத்திறமையால் 3 பேரும் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பினர்.
இதனால், அவருக்கு ம.தி.மு.க. வழக்கறிஞர் பேரவை சார்பாக சென்னையில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ராம் ஜெத்மலானி பேசுகையில், “ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதிகளுள் ஒருவரான நளினிக்கு மாநிலத்தின் கவர்னர் மன்னிப்பு அளித்ததால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இப்போது ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா சரியான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். இந்த முடிவில் அவர் உறுதியாக இருந்து அவர்களை விடுதலை செய்வார் என்று நம்புகிறேன். மூன்று குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க நீண்ட காலமாகிவிட்டது. அவர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர்” என்று குறிப்பிட்டார்.