Designed by Iniyas LTD
முதல் விதை
தேசத்தின் விடுதலைக் கனவை சுமந்து
ஆயுதம் ஏந்திக் களம் சென்று
போரிட்டு மாண்ட முதல் பெண் புலி
0
பள்ளிக் காலத்தில்
அப்பியாச புத்தகங்களின்
நடுவில் உன் வீரவணக்கப் படம்
சிறுவர்கள் உருகியழைக்கும்
மாலதி அக்கா.
கோப்பாயில் நீ சிந்திய குருதி
எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
கழிந்தாலும்
காய்ந்திடாது
அசோகப்படைகளை தாக்கும் சமரில்
விழுப்புண்னுற்று
‘என் துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்!’
என்றுரைத்த உன் இறுதிக் குரல்
கேட்கிறது இன்னும்.
வானம் உருக
பூமியின் கண்களை நனைத்து
தாய் மண்ணை முத்தமிட்ட
முதல் விதை.
0
#மாலதி அக்காவின் நினைவுநாள் இன்று
தீபச்செல்வன்
