Designed by Iniyas LTD
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தும் மோதவுள்ளன
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதவுள்ளன. இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இன்னும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால், பெர்த் நகரில் பிப்ரவரி 1ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு அவுஸ்திரேலியா தகுதி பெற்று விடும்.
இங்கிலாந்து வெற்றி பெற்றால், இறுதி ஆட்டத்துக்கு முன்னேற மூன்று அணிகளுக்கு இடையிலும் போட்டி நிலவும்.
தாமதப் பந்துவீச்சு காரணமாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஸ்டீவ் ஸ்மித் அணியை வழி நடத்தவுள்ளார்.
அதோடு, தசைப்பிடிப்பு காரணமாக டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, மூன்று முக்கியமான வீரர்கள் இல்லாதது அவுஸ்திரேலிய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. ஸ்டீவ் ஃபின், ஜேம்ஸ் ஆண்டர்சன் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சும், அவுஸ்திரேலியாவுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் உள்ளது.