தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் அமைச்சர் மற்றும் தூதுவரான யூ.பி.விஜயகோன் இயற்கை எய்தியுள்ளார்

vijayakonமுன்னாள் அமைச்சர் மற்றும் தூதுவரான யூ.பி.விஜயகோன்(79) கண்டி வைத்தியசாலையில் வைத்து இன்று உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யாழ் மாவட்ட அமைச்சராக விஜயகோன் கடமையாற்றியுள்ளார். விஜயகோன் வெலிமடையை சேர்ந்தவர் என்றும், இவர் தன் பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகோன் ,2003 அம் ஆண்டு ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...