தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கத்துடன் கனேடிய தூதுவர் கலந்துரையாடல்

இலங்கைக்கான கனேடியத்தூதுவர் டேவிட் மெக்மிலன் மற்றும் தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களிற்கான முதன்மைச் செயலாளர் வலேரி ஓலேற் ஆகியோருடன் ஒட்டாவாவில் இருந்து வருகை தந்திருந்த சமாதானத்திற்கான நீண்டகாலச்செயற்பாடுகளிற்கான பணியகத்தின் அதிகாரிகள் இன்று வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது போருக்குப்பின்னரான காலப்பகுதியில் வன்னிப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மீழ் குடியேற்றம், காணி ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட குடியேற்றச் செயற்பாடுகள், அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரான நிலைமைகள், கனடா மற்றும் புலம்பெயர் தமிழர்களால் தாயக பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது வடக்குமாகாண சுகாதார சேவைகள் மேம்பாடு தொடர்பாகவும் குறிப்பாக கனடா நாட்டினால் மேற்கொள்ளப்படக்கூடிய அனுசரனை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அண்மையில் நெதர்லாந்து நாட்டு நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுகாதாரத்திட்டங்கள் தொடர்பாகவும் மாங்குளத்தில் அமைக்கப்படும் விசேட தேவைக்குட்பட்டவர்களிற்கான மருத்துவப்புனர்வாழ்வு மற்றும் உளநல பிரிவுகளில் பணிக்கமர்த்தப்பட இருக்கின்ற ஊழியர்களிற்கான விசேட பயிற்சிகளில் கனடா நாட்டினால் நல்கக்கூடிய அனுசரனை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


Comments
Loading...