Designed by Iniyas LTD
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது பலியானவர்களின் குடும்பத்தினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளிகள் வழக்கு தொடர முடியாது என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கருணை மனு நிராகரிப்பில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணை மனு கால தாமதமாக நிராகரிக்கப்பட்டதை காரணமாக கொண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து அவர்களையும் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் முடிவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.