தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் போராளிகளுக்கு கிளியில் வாழ்வாதார உதவி!

sen 1புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் நூறு பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

வடமாகாண போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் ப.டெனிஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக தொழில் பயிற்சி நிலையத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 100 பேருக்கு வாழ்வாதார உதவிக்காக தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து குறித்த பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

sen 2

Comments
Loading...