தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் போராளிகளை புறக்கணிக்கும் வறட்சி நிவாரண திட்டம்…

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் வசித்துவரும் முன்னாள் போராளியான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு துணுக்காய் கிராம அலுவலகரினால் அநீதி இழைக்கப்பட்டு வருவதாக விசனம் வெளியிடப்பட்டு வருகின்றது.

குறித்த முன்னாள் போராளி வீட்டுத்திட்டம், வறட்சி நிவாரணத்தில் தான் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிராம அலுவலருக்கு எதிராகவும் பிரதேச செயலாளருக்கு எதிராகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு முறைப்பாடு மேற்கொண்டதால் தன்னை பழிவாங்கும் நடவடிக்கையில் கிராம அலுவலகர் மற்றும் பிரதேச செயலாளர் ஈடுபட்டு வருவதாக முன்னாள் போராளி குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments
Loading...