Designed by Iniyas LTD
முன்னாள் போராளிகள் காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனராம்!
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர், வடக்கில் காணிகளை சுவீகரித்துள்ளதாக, ஸ்ரீலங்கா அரசின் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குற்றம் சுமத்தியுள்ளார். யுத்த காலத்தில் பல காணிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.
தற்போது அந்த காணிகளை விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தங்களின் கட்டுபாட்டில் வைத்துள்ளனர்.
இவ்வாறான காணிகளை மீட்பது குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கப்படுவதில்லை. மாறாக இராணுவத்தின் வசமுள்ள காணிகளை மட்டுமே விடுவிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று அவர் குற்றம்சாடியுள்ளார்.