Designed by Iniyas LTD
முப்படையினருக்கும் தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
அவசரகால சட்டம் காலாவதியான நிலையில், முப்படையினருக்குமான தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின் படி, இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும், நீர்ப்பரப்புக்களிலும் பொதுஅமைதியை பேணுவதற்கு ஜனாதிபதியினால் முப்படையினருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்ரல்-21 பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புடையோரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளுக்காகவும் பயங்கரவாத தடைச்சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.