Designed by Iniyas LTD
மூழ்கும் கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 20 பணியாளர்கள் பத்திரமாக மீட்பு
கொச்சியில் இருந்து குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த வர்த்தக கப்பலில் திடீரென விரிசலில் ஏற்பட்டது. இதையடுத்து கப்பல் மற்றும் அதில் உள்ள 20 ஊழியர்களை காப்பாற்றும் முயற்சியில் கடற்படை ஹெலிகாப்டர் ஈடுபட்டு வந்தது. மிகுந்த சவால்களுக்கிடையே 19 பணியாளர்களை முதலில் மீட்ட கடற்படையினர், இறுதியில் கப்பலின் கேப்டனையும் பாதுகாப்பாக மீட்டனர்.
நேற்று நள்ளிரவில் மும்பை துறைமுகத்தில் இருந்து வட மேற்கில் 40 கடல்மைல் தொலைவிலும், வசையில் இருந்து 25 கடல்மைல் தொலைவிலும், ஜிண்டால் காமாட்சி என்ற அந்த கப்பல் சென்றுகொண்டிருந்த போது திடீரென அதில் விரிசல் ஏற்பட்டது. இது குறித்து இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கப்பலில் உள்ள 20 பணியாளர்களை காப்பாற்ற ‘சீ கிங்’ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டதாக தெரிவித்த கடற்படை செய்தி தொடர்பாளர் டி.கே. ஷர்மா, மோசமான வானிலை நிலவிய போதிலும், கடல் கொந்தளிப்பான நிலையில் இருந்தபோதும் மிகுந்த சவாலுக்கிடையே 19 ஊழியர்கள் முதலில் மீட்கப்பட்டனர். சிறிது நேரத்தில் கப்பலின் கேப்டனும் உயிருடன் மீட்கப்பட்டார் என தெரிவித்தார்.
தற்போது கப்பல் கொஞ்சம் கொஞ்சடாக மூழ்கி வருவதாக கூறப்படுகிறது. எனினும் விரிசலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.