தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முரசுமோட்டை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

Untitledஇன்று  மாலை முரசுமோட்டை ஐயன்கோவில்   ஆற்றில் ஒருவர் குளிப்பதற்கு  ஆற்றில்  இறங்கியதை  கண்ட  அவ்  ஊர்மக்கள் சிலர்   அவரை   காணவில்லை  என  தேடிய  பொழுது  அவரது  கைத்தொலைபேசி , பாதணி  மற்றும்  அவரது  சேட்  என்பன  ஆற்றுக்  கரையில்  இருப்பதனை கண்டு  குறித்த  ஆற்றில்  அவரை  தேடிய  வேளை அவர்  சடலமாக  மீட்க்கப்பட்டுள்ளார்

சடலமாக  மீட்கப்பட்டவர்  முரசுமோட்டை  சேற்றுக் கண்டியை  சேர்ந்த  முப்பத்தி  மூன்று  வயதான  மகாலிங்கம்  சுமன்  என   அக்  கிராம  மக்கள்  தெரிவிக்கின்றனர்

இறந்தவரின்  சடலம்  ஊர்மக்கள்  சிலரால்  மீட்கப்பட்டு  ஆறின்  அருகில்  வைக்கப்பட்டுள்ளது  குறித்த  சம்பவம்  தொடர்பாக  கிளிநொச்சி  ஸ்ரீ பொலிஸ்  நிலையத்திற்கு   தகவல்  அனுப்பி இரண்டு  மணித்தியாலங்கள்  கடந்த  வேளையிலும்  கிளிநொச்சி  பொலிசார் சம்பவ  இடத்திற்கு  வரவில்லை  என  ஊர்மக்கள்   குற்றம்  சாட்டுகின்ற  வேளை குறித்த  மரணத்தில்  சந்தேகம்  இருப்பதாக இறந்தவரின்  உறவினர்களும்  தெரிவிக்கின்றனர்.

Comments
Loading...