தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முறக்கொட்டான்சேனை சிங்கள இராணுவ முகாமை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை சிங்கள இராணுவ முகாமினை அகற்றி முகாமின் உள்ள பாடசாலை கட்டடத்தை விடுவித்து தருமாறும் அந்த பகுதியிலுள்ள வீதியினை திறந்து தருமாறு கோரி பொது மக்கள் இன்று வெள்ளிக்கிழமை(08) இராணுவமுகாமிற்கு முன்னாள் கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறக்கொட்டான்சேனை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டது.இதனையடுத்து இராணுவ முகாமிற்கு முன்பாக கூடிய பொதுமக்கள், உட்பட பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் கோறளைப்பற்று பிரதேச சபை உப்பினர்களான க.கமலேஸ்வரன், கு.குணசேகரம், சு.சுதர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டு ‘எமது காணி எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, ‘பாடசாலைகை; காணியை உடன் விடுவி, ‘நாம் மரத்தடியிலும் தகரத்தடியிலும் கல்வி கற்பதா, ‘கௌரவ பிரதமரே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை, ‘ஜனாதிபதியே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை போன்ற சுலோககங்கள் ஏற்தியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனிடம் கையளித்தனர் இதன்போது இவ் இராணுவ முகம் வேறு இடத்திற்கு செல்வதற்கான அடிப்படைத் தேவைகளை ஜனாதிபதி தமது நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்து தருவதாக குறிப்பட்டிருந்தார், இருந்தபோதிலும் ஏன் இன்னும் குறித்த இராணுவ முகாம் விடுவிக்கப்படவில்லையென சந்தேகம் ஏற்படுகின்றது, இதில் ஏதும் அரசியல் பின்னணி உள்ளதா என்ற சந்தேகமும் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 11.03.2019 ஆம் திகதி ஜானாதிபதியினை சந்தித்து இதற்கான தீர்வினை பெற்று தருவதாகவும். பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் வாக்குறுதியளித்தையடுத்து ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இதேவேளை முறக்கொட்டான்சேனை இராம கிருஸ்ண மிஷன் பாடசாலை கட்டிடம் காணி உட்பட 52 குடியிருப்பாளர்களின் காணிகளை உள்ளடக்கி 11 ஏக்கர் பரப்பில் கடந்த முகாமானது 1990ம் ஆண்டு இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Comments
Loading...