தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் அதிகளவான கண்ணிவெடிகள்

Deminer5

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படுவதில்லை என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பகுதிகளில் அதிகளவான பகுதி முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் நடந்த போரினால் இந்த மாவட்டம் அதிகமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இறுதி யுத்தம் நடைபெற்ற இந்தப் பகுதியிலேயே அதிகளவான கண்ணிவெடிகள் புதைந்த நிலையில் காணப்படுகின்றன.

64 கிலோ மீற்றர் பகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றப்பட உள்ளதாகவும் அதில் 73 வீதமான பகுதி முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹலோட்ரஸ் என்ன தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டளவில் நிலக்கண்ணி வெடிகள் முற்று முழுதாக அகற்றப்பட வேண்டுமென விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதன் மூலம் மக்களை மீள்குடியேற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...