தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் இடம்பெற்ற உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு..

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் வோர் சைல்ட் ஹொலன்ட் உடன் இணைந்து முரண்பாடுகளின் பிற்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உரிமைகளை அடைதலும் அதற்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்தலும் எனும் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பூனகரி பிரதேச செயலக பிரிவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அமுலாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரிவுக்குட்பட்ட தச்சடம்பன் மற்றும் ஒலுமடு கிராமங்களில் குறித்த திட்டத்தில் பொஸ்டோ நிறுவனத்தால் வழங்கப்பட்ட உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சியின் இறுதி நிகழ்வான பிரியாவிடை நிகழ்வு நேற்றையதினம் காலை 10.00 மணிக்கு தச்சடம்பன் பொதுநோக்கு மண்டபத்திலும், மாலை 3.00 மணிக்கு ஒலுமடு கிராமசேவகர் அலுவலகத்திலும் நடைபெற்றது.

தச்சடம்பன் கிராம அலுவலர் பிரிவிலுள்ள சூரியகாந்தி சிறுவர்கழகம் மற்றும் ஒலுமடு கிராம அலுவலர் பிரிவிலுள்ள செந்தாமரை சிறுவர்கழக சிறார்களினால் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வில் சிறுவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்குடன் 135 வகையான புத்தகங்களும்,விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் விளையாட்டு உபகரணங்களும் இரண்டு சிறுவர் கழகங்களிற்கும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிராம சேவையாளர்,கிராமமட்ட அமைப்பினர், பொஸ்டோ நிறுவன உத்தியோகத்தர்கள்,தொண்டர்கள்,பெற்றோர்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments
Loading...