தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின்  சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனங்கூடல்

குறித்த சடலம் நேற்றையதினம்  மாலை முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதுடைய   வரதராஜா சதாநிசன் என்ற  நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செல்வபுரம்   பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் உந்துருளி ஒன்று மாலை வரை நின்றுள்ளதை அவதானித்த  பொதுமக்கள்  முல்லைத்தீவு பொலீஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.

குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார்  வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலை மீட்டுள்ளனர்.

இந்நிலையில்  குறித்த இளைஞனின் தந்தையும்  கிராமமக்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு  சென்றுள்ளார்.

உந்துருளியின் இலகத்தினை வைத்து தனது மகனின் உந்துருளி என உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரேத பரிசோதனை

இந்நிலையில்  இன்று காலை குறித்த பகுதிக்கு  சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார்  உடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மற்றும் குற்றத்தடுப்பு பொலிசார் இணைந்து  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கழுத்து பகுதியில் பாரிய வெட்டுக்காயம் இருப்பதால் இது திட்டமிட்ட கொலையாக இருக்குமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...