Designed by Iniyas LTD
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வெளிநாட்டு மாணவர்கள்….
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்திவருருகின்றனர்.
இன்றைய தினம் முல்லைத்தீவில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 695 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இலங்கையில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் மாணவர்கள் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.
இதன்போது வெளிநாடுகளை சேர்ந்த குறித்த மாணவர்கள் தங்கள் ஆய்வுகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தற்பாதைய நிலைப்பாடுகள் தொடர்பிலும் அங்கு சென்று ஆராய்ந்துள்ளார்கள்.


