தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் படைப்புழுக்களின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

நாட்டின் பல பகுதிகளிலும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள படைப்புழுக்களின் தாக்கம் முல்லைத்தீவிலும் துரித கதியில் பரவி வருகிறது.

 இந்த படைப்புழுக்களின் தாக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பேரணி முன்னெடுக்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டுள்ளது

முல்லைத்தீவு விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட திணைக்களங்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் என்பன இணைந்து  இன்று காலை 9.3௦ மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட விஸ்வமடு பகுதியில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி ரெட்பான சந்திவரை சென்று    அங்கு மக்களுக்கு விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது படைப்புழுக்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் தொடர்பான துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன

அத்துடன் விவசாய செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் படைப்புழுவிலிருந்து பாதுகாக்கும் முறைமைகள் தொடர்பாகவும் விவசாயிகள், பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...